இந்தியா

ஆதரவு கோருவதற்காக பாட்னா வருகிறார் யஷ்வந்த் சின்ஹா

IANS

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தேர்தலுக்கான ஆதரவு கோருவதற்காக இன்று பாட்னாவுக்கு வருகிறார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளார். அவா், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறார். 

இந்நிலையில் பாட்னாவில், ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோடு பிற்பகல் 3 மணிக்கு இங்குள்ள ஒரு உணவகத்தில் அவர் சந்திப்பு நிகழ்த்த உள்ளார். 

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

சின்ஹா சில நாள்களுக்கு முன்பு ஆர்ஜெடி தலைவர் லாலு பிரசாத்தை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தார் 

இவரின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் ஆளுநரும், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவருமான திரௌபதி முர்வை எதிர்த்து மூத்த அரசியல்வாதிகள் போட்டியிடுகிறனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT