இந்தியா

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

PTI

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது, பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். 

பள்ளி நிர்வாகம் உடனே காவல்நிலையத்திற்கு தகவலளித்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் மற்றும் மோப்ப நாய்ப்படையுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.

பள்ளியில் உள்ள மாணவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, போலீசார் வளாகத்தை முழுமையாக சோதனை செய்து, மிரட்டல் புரளி எனத் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் பரவியதையடுத்து, பீதியடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கப் பள்ளிக்கு விரைந்தனர்.

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதால் பெற்றோர்கள் பீதியைத் தவிர்க்குமாறு பள்ளி நிர்வாகம் கூறியது.

பள்ளிக்கு அஞ்சல் அனுப்பிய நபர் எங்கிருக்கிறார் என்பதை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT