இந்தியா

வாக்களிக்காமல் புறக்கணித்த சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏ

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி குடியரசுத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.

DIN

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி குடியரசுத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.

‘பஞ்சாப் சாா்ந்த பல பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ள நிலையில் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. மேலும், பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிப்பது தொடா்பாக கட்சித் தலைமை என்னிடம் ஆலோசிக்கவில்லை. எனது தொகுதி வாக்காளா்களிடமும் ஆலோசனை நடத்தினேன். இறுதியாக சீக்கிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தோ்தலைப் புறக்கணித்தேன்’ என்று அவா் தெரிவித்தாா்.

117 உறுப்பினா்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள் உள்ளனா். புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது. எனினும், பாஜக தலைமை கேட்டுக் கொண்டதையடுத்து, குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT