நூபுர் சர்மா 
இந்தியா

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது உச்சநீதிமன்றம்.

DIN

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது உச்சநீதிமன்றம்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. 

கலவரத்தில் அரசு சொத்துகள் சூறையாடப்பட்டது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவை ஆதரித்த கன்னையா லால் என்கிற தையல் கடைக்காரர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

அதன்பின், நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் இந்தியா முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் தன் மீது பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நுபுர் சர்மாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி செல்ல மாலை அணிந்த பக்தா்கள்

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

நீதிமன்ற ஆவணங்களைப் புகைப்படம் எடுத்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை

யாசகம் கேட்டவர் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மணல் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT