இந்தியா

உ.பி.யில் அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வுக் கட்டணம்!

IANS

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வுக் கட்டணம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம். பிபிஏ, பிசிஏ, பிஎப்ஏ, பி.எட், பிபிஇஎட், பிஜேஎம்சி, பி.ஒக்கேஷன் ஆகிய பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ (செமஸ்டர்) தேர்வுக்கு ரூ.800 செலுத்த வேண்டும். 

எல்எல்பி, பி.எஸ்சி அக்ரி(ஹானர்ஸ்) எல்எல்பி(ஹானர்ஸ்), பி.டெக், பி.எஸ்சி பயோடெக் படிக்கும் மாணவர்கள், பிடிஎஸ் (நர்ஸிங்), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கு ரூ.1000 செலுத்து வேண்டும். மேலும் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் ரூ.1,500 செலுத்த வேண்டும். 

இதற்கான சுற்றறிக்கையை உயர் கல்வித்துறை சிறப்புச் செயலாளர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், உத்தரப் பிரதேச அரசின் உயர்கல்வித் துறையின் சிறப்புச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் தேசியக் கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவதால், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒரு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும்.

உத்தரப் பிரதேச மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம், 1973இன் கீழ் நிறுவப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணங்களில் மாறுபாடுகள் உள்ளன, எனவே அது சரியல்ல என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் உள்ள படிப்புகளில் செமஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT