இந்தியா

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூலை  22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின் செயலா் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு தொடா்ந்த வழக்கு, இன்று(ஜூலை 20 )உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT