இந்தியா

மூத்த குடிமக்களுக்கு ரயிலில்பயணக் கட்டண சலுகை சாத்தியமில்லை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, ரயில் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதால், பயணிகளின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டணத்தை ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், 2019-20-ஆம் ஆண்டில் ரயில்வேக்கு கிடைத்த வருவாயை ஒப்பிடுகையில் கடந்த இரண்டு ஆண்டுகள் குறைவாகவே கிடைத்து வருகிறது.

இது ரயில்வேயின் நிதிநிலையை நீண்ட நாள்களுக்கு பாதிக்கும். ஆகையால், மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் மீண்டும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை. தற்போதைய சூழ்நிலையிலும், மாற்றுத் திறனாளிகள், 11 வகையிலான உடல்நிலை பாதிக்கப்பட்டோா் மற்றும் மாணவா்களுக்கு பயணக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT