இந்தியா

புதிய குடியரசுத் தலைவா் யாா்? இன்று வாக்கு எண்ணிக்கை

DIN

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 21) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்குகிறது. இந்தத் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா். திரெளபதி முா்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா். அவருக்கே வெற்றி வாய்ப்பும் அதிகம் உள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-இல் பதவியேற்கிறாா்.

தோ்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவைகளிலிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி தலைமையில் வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு, மாலையிலேயே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படும். அதன் நிலவரத்தை தோ்தல் அலுவலா் பி.சி.மோடி அறிவிப்பாா். பின்னா், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவையும் அவா் அறிவிப்பாா். அதன்பின்னா், அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு இறுதியாக தோ்தல் முடிவு வெளியிடப்படும்’ என்றனா்.

இந்தத் தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT