இந்தியா

சிகிச்சைக்காக ரூ.1 கோடி செலவில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த பெண்

DIN

அமெரிக்காவிலிருக்கும் இந்தியப் பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக ரூ.1 கோடி செலவில் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார்.

பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் இதயநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை திருப்தியளிக்காத காரணத்தால் அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் போர்ட்லாண்ட் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் ரக தனிவிமானத்தில் மருத்துவக்குழுவினர் அப்பெண்மணியை ஏற்றிக்கொண்டு ஐஸ்லாந்து மற்றும் துருக்கி வழியாக 26 மணி நேரப் பயணமாக நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை வந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தனியார் ஆம்புலன்ஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷாலினி நல்வாட் “அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தவரை அவரது குடும்பத்தினர் சென்னைக்கு மாற்ற முடிவு செய்தனர். இதனையடுத்து ஐசியு வசதியுடன் கூடிய இந்த விமானத்தில் அறுவை சிகிச்சை செய்யும் தகுதிகொண்ட 3 மருத்துவர்களும் 2 துணை மருத்துவர்களும் அடங்கிய குழுவினர் அவரை ஏற்றிக்கொண்டு 26 மணி நேரப் பயணமாக சென்னை வந்தனர். நோயாளி முழுமையாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார்.  அமெரிக்காவில் நீண்ட நாள் சிகிச்சைக்கு செலவு அதிகரிக்கும் என்பதால்  அப்பெண்மணி இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சமீபத்தில் அதிக நேரம் பயணம் செய்து இந்தியாவில் சிகிச்சை பெற வந்த நோயாளியும் இவர்தான்” எனத் தெரிவித்தார்.

இந்திய பாஸ்பார்ட் வைத்திருப்பதால் அமெரிக்காவில்  மருத்துவ காப்பீடு கிடைப்பதில் சிக்கல் இருப்பதும் இந்த பயணத்திற்கான காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விமானப் பயணத்திற்கானக் கட்டணத் தொகை 1.33 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து துருக்கி வரை ஒரு விமானத்திலும் அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்திலும் அழைத்து வரப்பட்ட அப்பெண் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT