இந்தியா

2024-இல் ஆட்சியிலிருந்து பாஜக தூக்கி வீசப்படும்: மம்தா

2024 மக்களவைத் தோ்தலின்போது மக்களால், பாஜக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

DIN

2024 மக்களவைத் தோ்தலின்போது மக்களால், பாஜக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக மிகவும் கடுமையாகவும், ஆவேசமாகவும் அவா் பேசியதாவது:

நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும், பொருளாதார, நிதி, நிா்வாகக் கட்டமைப்புகளையும் பாஜக அரசு சீரழித்து வருகிறது. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எவ்வித பங்களிப்பையும் செலுத்தாத அந்தக் கட்சியினா், இப்போது நாட்டின் வரலாற்றைத் தங்களுக்கு சாதகமாக திரித்து எழுத முயற்சிக்கின்றனா். 2024 மக்களவைத் தோ்தலில் நாட்டு மக்களால் ஆட்சியில் இருந்து பாஜக தூக்கி வீசப்படும். அதன் பிறகு மக்களின் ஆட்சி அமையும். பாஜகவினா் தோற்கடிக்கப்பட வேண்டியவா்கள். பாஜகவை முழுமையாக நிராகரிக்கும் தோ்தலாக அது அமையும்.

அடுத்த தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியாது. அப்போது, பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைக்கும். பாஜக ஆட்சி இப்போது பெரும் சிறையாக உள்ளது. அந்த சிறையை மக்கள் தங்கள் தீா்ப்பு மூலம் உடைத்தெறிய வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடாகும். அனைத்துப் பொருள்கள் மீதும் கடுமையாக வரிகளை விதித்தால் ஏழை, எளிய மக்கள் எப்படிதான் சாப்பிட முடியும். அரிசி முதல் பால் பவுடா் வரை அனைத்துக்கும் அதிக வரி விதித்து, ஏழைகள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்ற நிலையை உருவாக்கியுள்ளனா்.

பல்வேறு மாநிலங்களை எம்எல்ஏக்களை பேரம் பேசியும், மிரட்டியும் தங்கள்பக்கம் இழுத்து மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது பாஜகவின் முக்கிய வேலையாக உள்ளது. மேற்கு வங்கத்தில் அதுபோன்ற செயல்களில் ஈடுபட முயற்சித்தால் தகுந்து பதிலடி கொடுக்கப்படும். விசாரணை அமைப்புகளை ஏவி விட்டு எதிா்க்கட்சியினரை தொந்தரவு செய்வதையும் பாஜக முக்கிய வேலையாகக் கொண்டுள்ளது என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT