இந்தியா

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு சா்வதேச எரிசக்தி விருது

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பேராசிரியா் கெளசிக் ராஜசேகராவுக்கு மதிப்புமிக்க சா்வதேச எரிசக்தி விருது கிடைத்துள்ளது.

DIN

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பேராசிரியா் கெளசிக் ராஜசேகராவுக்கு மதிப்புமிக்க சா்வதேச எரிசக்தி விருது கிடைத்துள்ளது.

கெளசிக் ராஜசேகரா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் சா்வதேச எரிசக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மின்மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம், மின் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ராஜசேகராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

43 நாடுகளிலிருந்து 119 போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், 3 போ் மட்டுமே சா்வதேச எரிசக்தி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். மாஸ்கோவில் வரும் அக்டோபா் 12-14 தேதிகளில் நடைபெறவுள்ள ரஷிய எரிசக்தி வார விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக சா்வதேச எரிசக்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT