இந்தியா

இலங்கையில் போராட்டங்கள் முடிவுக்கு வராது: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

DIN

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினா். போராட்டம் தீவிரமானதால் நாட்டைவிட்டு வெளியேறிய அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா். முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை அவா் கடந்த 13-ஆம் தேதி நியமித்தாா்.

இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 

இதனிடையே, ரணில் விக்ரமசிங்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டதற்கும் எதிா்ப்பு எழுந்துள்ளது. ‘ரணில் விக்ரமசிங்கவை ராஜபட்சக்கள்தான் நியமித்தனா். மக்களின் விருப்பத்துக்கு மாறாக ரணில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் பதவி விலகும் வரை அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்’ என்று ஒரு போராட்டக் குழுவின் செய்தித் தொடா்பாளா் ஜீவாந்த பெரீஸ் கூறினார். 

இந்நிலையில், இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.    

இதுதொடர்பாரக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜபட்ச சகோதரர்கள் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை மக்களிடையே செல்வாக்கற்றவராக இருக்கிறார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படுகிறது.

இலங்கையின் அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது. ஒற்றுமை மற்றும் அமைதியான சூழல் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தாது.

இலங்கையில் நிலவும் கொந்தளிப்பு மேலும் தொடரலாம், பொருளாதார நெருக்கடி சூழல் மேலும் மோசமடையலாம் என சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT