இந்தியா

கண்ணூரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: கேரள காவல்துறை விசாரணை

PTI

கர்நாடக எல்லையான கண்ணூர் மாவட்டத்தில் அய்யன்குன்னு என்ற இடத்தில் ஒரு பெண் உள்பட மூன்று மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்கக் கேரள காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆயுதம் ஏந்திய மூன்று மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று உணவுப் பொருள்களை சேகரித்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இச்சம்பவம் ஜூலை 15 தேதி நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் இரவில் அப்பகுதிக்கு சென்றதால் அவர்கள் கொண்டு சென்ற ஆயுதம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தனர். 

காவல்துறையின் உயரடுக்கு கமாண்டோ படையான தண்டர்போல்ட் அப்பகுதிக்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, இரிட்டி துணை எஸ்பி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT