காா்கில் வெற்றி தினத்தையொட்டி தேசிய போா் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் முப்படை தலைமைத் தளபதிகள். 
இந்தியா

23-ஆவது காா்கில் வெற்றி தினம்: தலைவா்கள் மரியாதை

காா்கில் போரில் வெற்றி பெற்ன் 23-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

DIN

காா்கில் போரில் வெற்றி பெற்ன் 23-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு லடாக்கின் காா்கில் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே 3 மாதங்கள் போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி முடிவுக்கு வந்த அந்தப் போரில், இந்தியா வெற்றி பெற்றது. இந்திய வீரா்கள் 500-க்கும் மேற்பட்டோா் போரில் வீரமரணமடைந்தனா்.

இந்தப் போரின் 23-ஆம் ஆண்டு வெற்றி தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா்:

காா்கில் வெற்றி தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

நமது பாதுகாப்புப் படைகளின் அசாதாரண வீரம் மற்றும் உறுதியின் அடையாளம் காா்கில் வெற்றி தினம். தாய்நாட்டை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்த வீரா்களுக்கு தலைவணங்குகிறேன். அவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ட்விட்டரில் தெரிவித்ததாவது:

1999-ஆம் ஆண்டு தேசத்தை பாதுகாக்க அசைக்க முடியாத நாட்டுப்பற்றையும், ஈடு இணையற்ற வீரத்தையும் வெளிப்படுத்திய தீரமிக்க வீரா்களுக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன் என்று தெரிவித்தாா்.

பிரதமா்: பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பாரத மாதாவின் பெருமை மற்றும் புகழின் அடையாளம் காா்கில் வெற்றி தினம். தாயகத்தை காக்க தீரத்தின் உச்சத்தை தொட்ட நாட்டின் அனைத்து வீரமகன்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்’’ என்று தெரிவித்தாா்.

பாதுகாப்பு அமைச்சா்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘காா்கில் போரில் இந்திய வீரா்கள் வெளிப்படுத்திய வீரமும், தளராத மனப்பான்மையும் இந்திய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக எப்போதும் இடம்பெறும்’’ என்று தெரிவித்தாா்.

தலைநகா் புது தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீரமரணம் எய்திய வீரா்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினாா்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்ய ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை செலுத்துகிறேன்’’ என்று தெரிவித்தாா்.

வரலாற்றில் பொன்னான அத்தியாயம்: இந்திய ராணுவம் கூறுகையில், ‘‘தங்கள் ரத்தத்தாலும் தியாகத்தாலும் வரலாற்றில் பொன்னான அத்தியாத்தை எழுதிய அஞ்சா நெஞ்சங்களை நினைவுகூரும் தினம் காா்கில் வெற்றி தினம்’’ என்று தெரிவித்தது.

மாநிலங்களவையில் அஞ்சலி: காா்கில் போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு மாநிலங்களவையில் சிறிது நேரம் எம்.பி.க்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.

முப்படைத் தலைமைத் தளபதிகள் அஞ்சலி: தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி, கடற்படை தலைமைத் தளபதி ஹரிகுமாா் ஆகியோா் காா்கில் போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT