இந்தியா

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

DIN

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக் 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்யவே, உச்சநீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT