கோப்புப்படம் 
இந்தியா

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை: மத்திய அரசு

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

DIN

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் 5.25 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை 1,600 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மார்ச் 2020 முதல் கரோனால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அளிக்குமாறு மாநிலங்களவை உறுப்பினர் அபிர் ரஞ்சன்தாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர், “கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் தனிப்பட்ட எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை. ஜூலை 23 வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 5,25,997 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் தரவுகளின்படி, கரோனா மூன்று அலைகளில் உயிரிழந்த மொத்த 1600 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் 757 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 90, மேற்கு வங்கத்தில் 80 பேர் பலியாகினர்.

இரண்டாம் அலையில்தான் மருத்துவர்கள் அதிகபட்சமாக உயிரிழந்தனர். தில்லியில் 128, பிகாரில் 115, உத்தரப் பிரதேசம் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT