இந்தியா

இந்திய விமானங்களை தடை செய்ய கோரியசிங்கப்பூா் சமூக ஆா்வலருக்கு தண்டனை

DIN

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என போராடிய சிங்கப்பூா் சமூக ஆா்வலா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவிப்பதாவது: சிங்கப்பூரை சோ்ந்த சமூக ஆா்வலா் ஹோக் கியோ வாக் (60). இவா் கடந்தாண்டு மே 1-ஆம் தேதி ‘இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும், நாங்கள் இனவாதிகள் அல்ல; ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா் இந்த படங்களை முகநூலில் பதிவிட்டாா்.

இதையடுத்து அவா் மீது பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அந்நாட்டில் வழக்குப் பதியப்பட்டது. அவா் சிங்கப்பூா் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கையொப்பமிடவும் மறுத்துவிட்டாா். அதன் தொடா்ச்சியாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் ஹோக் கியோவுக்கு பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT