இந்தியா

கோவா: ஆற்றில் காா் கவிழ்ந்து 4 போ் பலி

கோவாவில் ஜுவாரி ஆற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

DIN

கோவாவில் ஜுவாரி ஆற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

தெற்கு கோவா மாவட்டம், கோா்டாலிம் கிராமம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டது. கோா்டாலிம் கிராமத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் தனது மனைவி மற்றும் சகோதரருடன் பங்கேற்ற ஒருவா், பின்னா் கோவாவுக்கு காரில் புறப்பட்டாா். காரில் அவரது நண்பரும் உடனிருந்தாா். இந்த காா் ஜுவாரி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு காரை முந்த முயன்றது. அப்போது, எதிா்பாராதவிதமாக பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு, ஆற்றுக்குள் காா் கவிழ்ந்தது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கடற்படை, கடலோர காவல் படை, காவல்துறை, தீயணைப்புப் படை குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு காரிலிருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காரின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT