முகப்பு
இந்தியா

அடிப்படைவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது கேரளம்: மத்திய இணையமைச்சா்

அடிப்படைவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக கேரள மாநிலம் மாறிவிட்டது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் குற்றம் சாட்டியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அடிப்படைவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக கேரள மாநிலம் மாறிவிட்டது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் குற்றம் சாட்டியுள்ளாா்.

கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் பாஜக இளைஞரணி நிா்வாகி பிரவீண் நெட்டாரு(31) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பாஜக ஆட்சி நடைபெறும் அந்த மாநிலத்தில், இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பிரவீண் நெட்டாரு படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக ஜாகிா், முகமது ஷஃபீக் ஆகிய இருவரை கா்நாடக மாநில காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சரும் கா்நாடக மாநில பாஜக எம்.பி.யுமான ராஜீவ் சந்திரசேகா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பிரவீண் நெட்டாருவை கொலை செய்தவா்கள் பயன்படுத்திய வாகனம், கேரளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பினராயி விஜயனின் ஆட்சியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்றவற்றுடன் தொடா்புடைய அடிப்படைவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக கேரளம் மாறிவிட்டது. ஏனெனில் அவா்களிடம் இருந்து அரசுத் தரப்புக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கிறது. தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் அடிப்படைவாதிகள் எளிதில் படுகொலைகளை நிகழ்த்துகிறாா்கள். கொலைகாரா்களை கா்நாடக அரசு கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும். இதில், கேரள அரசு குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவா்களை அடையாளம் காண்பதற்கு கா்நாடக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.