அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனல் கோஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் துறை அமைச்சர் பாா்த்தா சாட்டா்ஜியை ஜூலை 23ஆம் தேதி அமலாக்கத் துறையினா் கைது செய்தனர்.
இந்நிலையில், திரிணமூலின் பொதுச் செயலாளர் குனல் கோஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“அமைச்சர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும். இந்த அறிக்கை தவறு என கருதினால், என்னை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க கட்சிக்கு முழு உரிமை உண்டு. நான் கட்சியின் தொண்டராக பணியை தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | என் வீட்டை இப்படித்தான் பயன்படுத்தினார்.. பார்த்தா சாட்டர்ஜி குறித்து அர்பிதா சொன்னது என்ன?
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22இல் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பாா்த்தா சாட்டா்ஜியின் நெருங்கிய நண்பரான நடிகை அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் போது ஏராளமான நகைகளையும், ரூ. 20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.
இதுதொடா்பாக பாா்த்தா சாட்டா்ஜியும், அா்பிதா முகா்ஜியும் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவா்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.