இந்தியா

‘சமூக விடுதலைக்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம்’: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

DIN

சமூக விடுதலைக்கு ஜனநாயகத்தில் அனைவரின் பங்களிப்பும் அவசியம்  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

இரண்டு நாள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதுமிருந்து மாவட்ட நீதிபதிகள் உள்பட 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதிமன்ற உத்தரவுகளை வழங்குவதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் நீதிகளை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது.

ஆனால் இன்றைய நிலையில் நாட்டின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களே தங்களது நீதிக்காக நீதிமன்றங்களை அணுகுகின்றனர். பெரும்பாலானோர் தங்களது சிக்கல்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வராமல் அமைதியாக இருந்து விடுகின்றனர். சமூகத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதே நவீன இந்தியாவின் இலக்காக உள்ளது. நாட்டில் ஜனநாயகம் என்பது அனைவருக்குமான இடத்தை உறுதி செய்வதாகும். அனைவரின் பங்களிப்பும் இல்லாமல் சமூக விடுதலையை அடைய முடியாது. நீதித்துறை என்பது சமூக விடுதலைக்கான கருவி” எனத் தெரிவித்தார்.

உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெரும் உழைப்பாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் 3 சதவிகிதத்தினர் மட்டுமே திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர். உலகளவில் உள்ள திறன்குறைந்த உழைப்பு படையின் இடத்தை இந்தியாவால் நிவர்த்தி செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT