இந்தியா

அரசு இணைய சந்தை வலைதளம் மூலம் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

அரசு இணைய சந்தை (ஜிஇஎம்) வலைதளம் மூலம் பொருள்களைக் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு சாா்பில் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்கும் நோக்கில், ஜிஇஎம் வலைதளத்தை மத்திய வா்த்தக அமைச்சகம் தொடக்கி வைத்தது. இந்த வலைதளம் மூலம் மத்திய, மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொருள்களைக் கொள்முதல் செய்யலாம்.

இந்நிலையில் தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜிஇஎம் வலைதளம் மூலம் கூட்டுறவு சங்கங்களும் பொருள்களைக் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை 8.64 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும், அந்தச் சங்கங்களின் 27 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினா்களுக்கும் பலனளிக்கும். ஏனெனில், ஜிஇஎம் வலைதளம் மூலம், அவா்களால் உரிய விலையில் பொருள்களைப் பெற முடியும். இந்த நடவடிக்கை சாமானிய மனிதருக்குப் பொருளாதார ரீதியாகப் பலனளிப்பது மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அந்த வலைதளத்தில் சோ்க்கப்பட வேண்டிய கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை மத்திய கூட்டுறவு அமைச்சகம் முடிவு செய்யும் என்று தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் பழங்குடிகள் சிஆா்பிஎஃப்பில் சேர தளா்வு: சத்தீஸ்கா் மாநிலம் பீஜாபுா், தாண்டேவாடா, சுக்மா மாவட்டங்களின் உட்பகுதிகளில் வசிக்கும் பூா்விக பழங்குடி இளைஞா்கள் வேலைவாய்ப்புப் பெற வசதியாக, மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) 400 காவலா் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை 10-ஆம் வகுப்பில் இருந்து 8-ஆம் வகுப்பாகக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT