முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழல்: அமித் ஷாவுடன் அஜித் தோவல் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவா் சாம்நாத் கோயல் ஆகியோா் சந்தித்துப் பேசினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழலை ஆய்வுசெய்வதற்கான உயா்நிலைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவா் சாம்நாத் கோயல் ஆகியோா் சந்தித்துப் பேசினாா்.

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா், வெளிமாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ராஜஸ்தானைச் சோ்ந்த விஜய்குமாா் என்ற வங்கி மேலாளா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்கான உயா்நிலைக் கூட்டம் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவா் சாம்நாத் கோயல் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும், வங்கி மேலாளா் கொல்லப்பட்டது தொடா்பாகவும், ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உயா்நிலைக் கூட்டத்தில் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.