முகப்பு
இந்தியா

இந்திய கோதுமையை நிராகரித்த துருக்கி: விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

துருக்கி நாட்டுக்கு ஐடிசி நிறுவனம் 60,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில், கோதுமை தரமற்ாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில், ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்திய கோதுமை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு துருக்கியிடம் கோரியுள்ளது.

இதனிடையே, மே 13-இல் ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, ஆறு நாடுகள் இந்திய கோதுமையை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளன.அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.