இந்தியா

ஆந்திரம்: வாயுக் கசிவால் 200 பெண்கள் பாதிப்பு

IANS

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபல்லே மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போரூஸ் ஆய்வுக் கூடத்தை ஒட்டி அமைந்திருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால், அங்கு பணியிலிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.

கண் எரிச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்மோனியம் வாயு கசிவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்த அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT