அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில் களமிறங்கும் ஆம் ஆத்மி

இந்தாண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

DIN

இந்தாண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பிரதானக் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டிருந்தாலும் குறிப்பிடத் தகுந்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் மாநகராட்சித் தேர்தலில் 27 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT