இந்தியா

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் தீ விபத்து: பலி 49 ஆக உயர்வு

DIN

வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. 

சிட்டகாங் அருவே உள்ள கதம் ரசூல் பகுதியில் தனியார் கண்டெய்னர் நிலையில் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குள் வெடிவிபத்து ஏற்பட்டது. 

சம்பவ இடத்துக்கு 200 பேர் கொண்ட ராணுவ மீட்பு மற்றும் ரசாயன நிபுணர் குழுவுடன் 10 தீயணைப்பு வாகனங்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தில் மீட்புப் பணிகளுக்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் சிக்கினர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட இதுவரை 450 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலியான 49 பேரில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள். 

படுகாயமடைந்தோர் சிட்டகாங்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

ஹைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம் இருந்த கண்டெய்னரில் ஏற்பட்ட ரசாயன எதிர்வினையால், தீ மற்ற இடங்களுக்குப் பரவி நீண்ட நேரம் எரிந்த‌தாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT