இந்தியா

வருங்கால கணவரைக் கைது செய்த 'பெண் சிங்கத்துக்கு' வந்த சோதனை?

DIN

அரசியல்வாதிகளை எதிர்த்து குரல் கொடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் புகழின் வெளிச்சத்துக்கு வந்த ஜுன்மோனி ராபா, கடந்த மாதம் வருங்கால கணவரை மோசடி வழக்கில் கைது செய்து, புகழின் உச்சிக்குச் சென்றிருந்த நிலையில், அவரே கைதாகும் நிலை உருவாகியுள்ளது.

வருங்கால கணவர் செய்த மோசடிக் குற்றங்களில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜுன்மோனி ராபா கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவர் காவல்துறை பணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

மோசடி வழக்கில் இரண்டு நாள்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், சனிக்கிழமை அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கூறி பொதுமக்களிடமிருந்து பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக வருங்காலக் கணவரான ரானா போகக்கை ராபா கடந்த மாதம் கைது செய்திருந்தார்.

இது குறித்து செய்திகள் வெளியானபோது, ராபாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால், சில நாள்களிலேயே அந்த நிலை தலைகீழாக மாறி, அந்த மோசடி வழக்கில் ராபாவுக்கும் தொடர்பிருப்பதாகவும், மோசடி மூலம் ராபாவின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.20 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரி என்று போகாக்கை தங்களுக்கு ராபா தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவரது உறுதிமொழியின் பேரிலேயே போகாக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாகவும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அடியோ பதிவுகளும் காவல்துறைக்குக் கிடைத்திருப்பதாகவும், அதன் உறுதித் தன்மை ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட போகாக் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT