முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பான சூழல் நிலவுகிறது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் காலை 9.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலையடுத்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணையை தில்லி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →