இந்தியா

சோனியா காந்தி கரோனாவிலிருந்து இன்னும் குணமடையவில்லை: தகவல்கள்

DIN


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எடுக்கப்பட்ட சமீபத்திய பரிசோதனையிலும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அழைப்பாணை அனுப்பிய மறுநாள் (ஜூன் 3) சோனியா காந்திக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட சமீபத்திய பரிசோதனையிலும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்கள் கூறியதாவது:

"சமீபத்திய பரிசோதனையின் முடிவின்படி சோனியா காந்திக்கு இன்னும் கரோனா நோய்த் தொற்று உள்ளது. அவருக்கு உரிய நேரத்தில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆனால், மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அமலாக்கத் துறை முன் ஆஜராக அவர் 3 வாரகாலம் அவகாசம் கோரியிருக்கிறார். இதற்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து இன்னும் பதில் இல்லை" என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT