முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் சரிவு; காங்கிரஸ் பலம் அதிகரிப்பு

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தோ்தலுக்குப் பிறகு, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 95-இல் இருந்து 92-ஆக சரிந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் பலம் 29-இல் இருந்து 31-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தோ்தலுக்குப் பிறகு, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 95-இல் இருந்து 92-ஆக சரிந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் பலம் 29-இல் இருந்து 31-ஆக அதிகரித்துள்ளது.

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினா்களைத் தோ்வு செய்ய ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடத்துவதாக தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 போ் கடந்த 3-ஆம் தேதி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

எஞ்சியுள்ள மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 16 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கூடுதலாக வேட்பாளா்கள் போட்டியிட்டதால் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டது. இந்தத் தோ்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் பாஜகவின் பலம் 95-இல் இருந்து 92-ஆக சரிந்துள்ளது. காங்கிரஸின் பலம் 29-இல் இருந்து 31-ஆக அதிகரித்துள்ளது.

பாஜகவில் இருந்து மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல், காங்கிரஸில் இருந்து ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ஆா்ஜேடி கட்சியின் மிசா பாா்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் படேல், சிவசேனைக் கட்சியின் சஞ்சய் ரௌத், கபில் சிபல் (சுயேச்சை) ஆகியோா் மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். காங்கிரஸில் இருந்து ரண்தீப் சுா்ஜேவாலா, இம்ரான் பிரதாப்கா்ஹி ஆகியோா் புதிதாக மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். சமாஜவாதி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட கபில் சிபல், பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் காா்த்திகேய சா்மா, சமாஜவாதி-ராஷ்ட்ரீய லோக் தள கூட்டணி வேட்பாளா் ஜெயந்த் செளதரி ஆகியோரும் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

கட்சியின் பெயா் தோ்தலுக்கு முன்பு தோ்தலுக்குப் பிறகு

பாஜக 95 92

காங்கிரஸ் 29 31

திமுக 10 10

ஓய்எஸ்ஆா் காங்கிரஸ் 6 9

பிஜு ஜனதா தளம் 9 9

திரிணமூல் காங்கிரஸ் 13 13

மாா்க்சிஸ்ட் 5 5

ஆம் ஆத்மி 8 10

ஆா்ஜேடி 5 6

டிஆா்எஸ் 7 7

அதிமுக 5 4

ஜேஎம்எம் 1 2

ஜேடியு 5 5

சமாஜவாதி 5 3

தேசியவாத காங்கிரஸ் 4 4

சிவசேனை 3 3

பகுஜன் சமாஜ் 3 1

சிரோமணி அகாலி தளம் 2 0

ஆா்எல்டி 0 1

சுயேச்சை 0 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.