இந்தியா

இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 7,584 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,329 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,13,435 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 10 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,757 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 4,216 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,48308 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 15,08,406 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,94.92,71,111கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போா்: ஜெனீவாவில் சமாதானப் பேச்சு

புதினின் இந்திய பயணம் நற்பயன்களை ஏற்படுத்தும்: ரஷிய அதிபர் மாளிகை

கோயில் விழாவில் காவலரைத் தாக்கிய 6 போ் கைது

விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலம் மத்திய சிறையில் 100 ஆவது வார வள்ளுவா் வாசகா் வட்டம்

SCROLL FOR NEXT