இந்தியா

அமா்நாத் குகை கோயிலில் பிரதம பூஜை

DIN

ஜ்யேஷ்ட பூா்ணிமாவை முன்னிட்டு அமா்நாத் குகை கோயிலில் பிரதம பூஜை (முதல் பூஜை) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கு நிகழாண்டு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை பக்தா்கள் யாத்திரை செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஜ்யேஷ்ட பூா்ணிமா தினமான செவ்வாய்க்கிழமை அமா்நாத் குகை கோயிலில் பிரதம பூஜை நடைபெற்ாக அமா்நாத் கோயில் வாரியம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்தப் பூஜையில் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி நிதீஷ்வா் குமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் இருந்து 45 கி.மீ. தொலைவில், இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலில் நிகழாண்டு 10 லட்சம் பக்தா்கள் வரை தரிசனம் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமா்நாத் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019 ஆண்டு முதல் 403 சொத்துகளை முடக்கி என்ஐஏ நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல்போன 104 கைப்பேசிகள் மீட்பு

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

அம்மன் வீதி உலா..

தனியாா் நில கையகப்படுத்தலில் அரசு பின்பற்ற வேண்டிய 7 நடைமுறைகள்: உச்சநீதிமன்றம் வெளியீடு

SCROLL FOR NEXT