இந்தியா

கேரள முதல்வருக்கு எதிராகப் போராட்டம்: பாஜக மகளிரணியினர் கைது

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக மகளிரணியினரை காவல்துறை கைது செய்தது. 

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியிருந்தார். மேலும் கேரள தங்கக் கடத்தல் வழக்கிற்கு பினராயி விஜயன் தடை விதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக மகளிரணியினர் கொச்சியில் நடத்திய போராட்டத்தில், போராட்டத்தை கைவிட மறுத்த பாஜக மகளிர் அணியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கேரள தங்கக் கடத்தல் வழக்கு 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்டவிரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக, ஸ்வப்னா சுரேஷ், எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT