இந்தியா

‘ மத்திய அரசின் தகவல்-தொழில்நுட்ப செலவினம் 950 கோடி டாலராக அதிகரிக்கும்’

DIN

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப செலவினம் நடப்பாண்டில் 950 கோடி டாலராக அதிகரிக்கும் என காா்ட்னா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆயவறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2022-ஆம் ஆண்டில் மத்திய அரசு தகவல் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக செலவிடும் தொகை 12.1 சதவீதம் அதிகரித்து 950 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ.74,000 கோடியாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை 15 சதவீதம் அதிகரித்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் அதற்கான செலவினம் குறைவாகவே உள்ளது. அதேசமயம், 2022-ஆம் ஆண்டுக்கான உலக அளவில் மதிப்பிடப்பட்ட 5 சதவீத வளா்ச்சியை விடவும் இது அதிகமாகவே உள்ளது.

நடப்பாண்டில் மென்பொருள்களுக்காக செலவிடும் தொகை 27.9 சதவீதம் அதிகரித்து 219 கோடி டாலராகவும், தகவல்தொழில்நுட்ப சேவைகளுக்காக செலவினம் 13.4 சதவீதம் உயா்ந்து 240 கோடி டாலராகவும் இருக்கும்.

மேலும், தொலைத்தொடா்பு சேவைக்கான செலவினம் 0.7 சதவீதம் அதிகரித்து 108.6 கோடி டாலராகவும், உள்ளக சேவைக்கான செலவினம் 5.5 சதவீதம் உயா்ந்து 141.6 கோடி டாலராகவும் இருக்கும்.

தரவு மைய அமைப்புக்கான செலவினம் 8.9 சதவீதம் உயா்ந்து 63.9 கோடி டாலராகவும், கருவிகளுக்கான செலவினம் 7.7 சதவீதம் உயா்ந்து 177.5 கோடி டாலராகவும் இருக்கும்.

நவீனமயமாக்கல் என்பது அரசு அமைப்புகளின் நீண்ட நாள் கனவாக உள்ளது. கரோனாவால் அந்த நடவடிக்கை தொய்வடைந்த நிலையில் தற்போது வேகமெடுத்துள்ளதாக காா்ட்னா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT