அக்னிபத் போராட்டம்: பிகாரில் 12 மாவட்டங்களில் இணையச் சேவை துண்டிப்பு
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகார் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்னிபத் போராட்டம்: பிகாரில் 12 மாவட்டங்களில் இணையச் சேவை துண்டிப்பு
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகார் பந்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிகாரில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், போராட்டம் தீவிரமடைந்திருக்கும் 12 மாவட்டங்களில் இன்று இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பிகார் பந்துக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நான்காவது நாளாக இன்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல ரயில்கள், பேருந்துகள் எரிக்கப்பட்டன. போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
முழு அடைப்புக்கு அழைப்பு
‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் சனிக்கிழமை முழு அடைப்புக்கு மாணவா் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் அனைத்து இந்திய இடதுசாரி மாணவா்கள் கூட்டமைப்பு (ஏஐஎஸ்ஏ) தலைமையிலான அமைப்புகள் கூறுகையில், ‘‘அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தத் திட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தன.
இதனிடையே, அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில ஆளுநா் ஃபாகு செளஹானை சனிக்கிழமை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.