இந்தியா

குருத்வாரா தாக்குதல் கோழைத்தனமானது: ஜெய்சங்கர் கண்டனம்

DIN

காபூலில் உள்ள குருத்வாரா மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், 

குருத்வாரா கார்டே பர்வான் மீது கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். தாக்குதல் பற்றிய செய்தி கிடைத்ததில் இருந்து நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஆப்கனில் உள்ள சீக்கிய சமூகத்தின் நலன் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். 

குருத்வாராவின் வாயிற்பகுதியில் வெடிகுண்டுச் சப்தம் கேட்டிருக்கிறது. பிறகு, வளாகத்தின் உள்ளே, மற்றொரு வெடிகுண்டு சப்தம் கேட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, குருத்துவாராவிலுள்ள சில கடைகள் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சீக்கியர், ஒரு முஸ்லீம் பாதுகாவலர் உள்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT