இந்தியா

கராச்சி சிறையிலிருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை

DIN

கராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய மீனவர்களின் பயணச் செலவுகளை எதி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. மேலும் அவர்களுக்கு உடைகள், ரேஷன், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

கடல் எல்லை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அவர்களின் தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டனர்

விடுவிக்கப்பட்டவர்களில் காஞ்சி, மனு, டானா, ஜீவா, ரமேஷ், தினேஷ், டேவிஸ், மிரோ, நரேன், பன்ரா, லால்ஜி, நாஞ்சி, அபு உமர், யூனிஸ், நிசார், அகீல், அமீன், ஃபரித், அனிஸ் மற்றும் தினேஷ் ஆகியோர் அடங்குவர்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு மாற்றப்படும் போது, ​​நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாலிர் மாவட்ட சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் முஹம்மது அர்ஷாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT