இந்தியா

'யாரும் இங்கே விக்டோரியா ராணியோ, இளவரசரோ அல்ல': யார் யாருக்குச் சொன்னது?

DIN


யாரும் இங்கே விக்டோரியா ராணியோ அல்லது இளவரசரோ இல்லை என்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ராகுல் காந்தி உள்படுத்தப்பட்டிருப்பது குறித்து பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது: நமது நாட்டில் யாரும் விக்டோரியா ராணியோ அல்லது இளவரசரோ கிடையாது, அவர்களை விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்று சொல்ல, சட்டத்தின் முன் இங்கு அனைவருமே சமம். ஊழலுக்கு எதிராக யாரையும் விசாரிக்கலாம்.. நேஷனல் ஹெரால்டு வழக்கில், நாட்டின் பணம் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பதும், அதில் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பிருப்பது குறித்தும் நாட்டு மக்கள் நன்கறிவர் என்று தெரிவித்துள்ளார்.

ஈடி என்பது அமலாக்கத் துறை என்று ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒன்றும் உரிமைக் கோரிக்கை அமைப்பு அல்ல, நாங்கள் மிகப்பெரிய குடும்பம், எங்களை எப்படி விசாரணைக்கு அழைக்கலாம் என்று ராகுல் காந்தி கேட்கிறார், விசாரணையை எதிர்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியிருக்கிறது என்றும் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது முறையாக அமலாக்க இயக்குநரகம் முன்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) மீண்டும் ஆஜராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்களாக 30 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.

இதனை ஏற்று 20-ம் தேதி திங்கள்கிழமை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT