சோனியா காந்தி 
இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் சோனியா

கரோனா பாதிப்பால் கடந்த எட்டு நாள்களாக தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

DIN

கரோனா பாதிப்பால் கடந்த எட்டு நாள்களாக தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை வீடு திரும்பினாா். வீட்டில் ஓய்வு எடுக்க மருத்துவா்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனா்.

ஜூன் 2-ஆம் தேதி சோனியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டுத் தனிமையில் இருந்து அவருக்கு மூக்கில் ரத்தப் போக்கு ஏற்பட்டதால் கடந்த 12-ஆம் தேதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.

நேஷனல் ஹெரால்டு பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் ஜூன் 8-ஆம் தேதி நேரில் ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கரோனா தொற்று காரணமாக ஆஜராவதற்கு அவகாசம் தேவை என்று சோனியா தரப்பில் கேட்கப்பட்டதையடுத்து, வரும் 23-ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT