முகப்பு
இந்தியா

போபாலில் வடிகால் சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

மத்தியப் பிரதேசத்தின், போபாலில் உள்ள ஒரு சாக்கடையின் வடிகால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

Updated On : 21 ஜூன், 2022 at 5:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:05 PM

மத்தியப் பிரதேசத்தின், போபாலில் உள்ள ஒரு சாக்கடையின் வடிகால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் பைராகர் பகுதியில் நடைபெற்றது. மேலும் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் அடித்தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியே எடுக்கப்பட்டன என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தேசிய மீட்புக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் 11 மணி நேர முயற்சிக்குப் பிறகு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.

Advertisement

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.