கோப்புப்படம் 
இந்தியா

கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்: சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ ஷிண்டே

இயற்கைக்கு மாறான கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், அதிருப்தி எம்எல்ஏ-வுமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

DIN


இயற்கைக்கு மாறான கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், அதிருப்தி எம்எல்ஏ-வுமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சிவசேனை தலைவரும், அதிருப்தி எம்எல்ஏ-வுமான ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை திரட்டி குவஹாட்டியில் உள்ளார். இதனால், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரே பேஸ்புக் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) மாலை ஆற்றிய உரையில், "அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என் மீது நம்பிக்கை இல்லை என்பதை என் முகத்திற்கு முன்பு சொன்னால் ராஜிநாமா செய்யத் தயார்" என்றார்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகளில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே இந்த அரசு பலன் சேர்த்துள்ளது. கட்சியைக் காப்பாற்ற இயற்கைக்கு மாறான இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய தேவை இருக்கிறது. மகாராஷ்டிர நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT