புது தில்லி: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சுழல் துறை நீக்கியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சகமே அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை முடிவு செய்யும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.