கார்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட தகவலில்,
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை அருகே உள்ள பல கிராமங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் மனோஜ் ராஜன் கூறுகையில்,
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா தாலுகாவில் உள்ள நகரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட மலுகனஹள்ளி கிராமத்தின் மையப்பகுதியாக இருந்தது.
நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது என்றும், நிலநடுக்க மையத்திலிருந்து அதிகபட்சமாக 40-50 கிமீ தூரம் வரை நடுக்கம் உணரப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.