இந்தியா

பாகிஸ்தானில் 8 மாதக் குழந்தைக்கு போலியோ தொற்று: பாதிப்பு 11 ஆக உயர்வு

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் 8 மாதக் குழந்தைக்கு போலியோ தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

DIN

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் 8 மாதக் குழந்தைக்கு போலியோ தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

புதிதாக போலியோ தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை மிர் அலி பகுதியைச் சேர்ந்ததாகும். இதையடுத்து வடக்கு வஜிரிஸ்தானில் மொத்த பாதிப்பு 11 ஆக அதிகரித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுவாக, மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வைரஸ் சுழற்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதால் போலியோ நோய் தொற்றுகளின் வழக்குகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் தெற்கில் கண்டறியப்பட்ட ஆறு போலியோ வழக்குகளும், கழிவுநீர் பிரச்னையினால் உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டன. 

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் குழந்தைகள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!

SCROLL FOR NEXT