இந்தியா

சத்யேந்தர் ஜெயினை காணொலி மூலமாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.  

DIN

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.  

கடந்த ஏப்ரலில், சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த மே 30-ஆம் தேதி சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

தொடர்ந்து, சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், நீதிமன்றக் காவல் இன்றுடன்(ஜூன் 27) முடிவடையும் நிலையில் அவரது காவலை அமலாக்கத்துறை நீட்டிக்ககோரிய நிலயில், சத்யேந்தர் ஜெயினின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது. 

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் சட்டப்படி, நேரில் ஆஜராகவில்லை என்பதால் காணொலி மூலமாக அவரை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT