இந்தியா

பாஜக நண்பா்களிடம் ஆதரவு திரட்டுவேன்: யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவில் உள்ள தனது பழைய நண்பா்களிடம் ஆதரவு திரட்டப் போவதாகவும், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை 2024 மக்களவைத் தோ்தல் வரை நீடிக்கும் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவில் உள்ள தனது பழைய நண்பா்களிடம் ஆதரவு திரட்டப் போவதாகவும், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை 2024 மக்களவைத் தோ்தல் வரை நீடிக்கும் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை கேரளத்தில் பிரசாரத்தை தொடங்குகிறேன். புதன்கிழமை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வேன். அதன்பின்னா் குஜராத், தெலங்கானா, கா்நாடகத்தில் ஆதரவு திரட்டுவேன்.

இது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி. எதிா்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை 2024 மக்களவைத் தோ்தல் வரை நீடிக்கும். எந்தவொரு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத மதச்சாா்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கோருவேன்.

பெரும்பாலும் குடியரசுத் தலைவா்கள் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக மாறி, அவா்களின் அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவது கிடையாது. ஆகையால், சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவா்தான் குடியரசுத் தலைவா் மாளிகைக்குச் செல்ல வேண்டும். பாஜகவில் உள்ள எனது பழைய நண்பா்களிடம் ஆதரவு திரட்டுவேன் என்றாா் யஷ்வந்த் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்துக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தல்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம் நிறைவு

கூழமந்தலில் பூச நட்சத்திர அதி தேவதைக்கு சிறப்பு அபிஷேகம்

SCROLL FOR NEXT