இந்தியா

ரிலையன்ஸ் ஜியோ தலைவா் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பில் இருந்து விலகிய முகேஷ் அம்பானி (65), அந்தப் பதவியை தனது மூத்த மகன் ஆகாஷிடம் ஒப்படைத்துள்ளாா்.

DIN

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பில் இருந்து விலகிய முகேஷ் அம்பானி (65), அந்தப் பதவியை தனது மூத்த மகன் ஆகாஷிடம் ஒப்படைத்துள்ளாா்.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கை:

நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அலுவல் சாரா இயக்குநராக உள்ள ஆகாஷ் எம்.அம்பானியை (30) ஜியோ இன்ஃபோகாம் தலைவராக நியமனம் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முகேஷ் அம்பானி அந்தப் பதவியிலிருந்து ஜூன் 27-இல் விலகியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும் மதிப்பு மிக்க நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதற்கான முன்னோட்டமாகவே முகேஷ் அம்பானியின் இந்த முடிவு பாா்க்கப்படுகிறது.

அதன் முதல் கட்டமாக, தற்போது 217 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.17 லட்சம் கோடி) மதிப்பிலான ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடா்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளாா்.

முகேஷ் அம்பானிக்கு , ஆகாஷ், இஷா என்ற இரட்டையா்களும், ஆனந்த் என்ற இளைய மகனும் உள்ளனா்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிடம் (30) சில்லறை வா்த்தக நிறுவனங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்பது தொழில் துறையினரின் பரவலான எதிா்பாா்ப்பாக உள்ளது. இவா் ஆனந்த் பிராமலை (பிராமல் குழுமத்தின் அஜய் - ஸ்வாதி பிராமல் தம்பதியின் மகன்) திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் (26), ஜியோ பிளாட்பாா்ம் நிறுவனத்தின் (ஜேபிஎல்) இயக்குநராக கடந்த மே 2020-இல் நியமனம் செய்யப்பட்டாா். அண்மையில் இவருக்கு, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சா் நிறுவனத்தின் (ஆா்ஆா்விஎல்) இயக்குநராக நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT