கலவரத்தில் படுகாயமடைந்த காவலர் 
இந்தியா

நூபுர் சர்மா ஆதரவாளர் கொலை: 'விடியோவைப் பகிர வேண்டாம்'

ராஜஸ்தானில் நூபுர் சர்மா ஆதரவாளர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விடியோவை ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டாம்

DIN

ராஜஸ்தானில் நூபுர் சர்மா ஆதரவாளர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விடியோவை ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டாம் என ராஜஸ்தான் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஹாவா சிங் குமேரியா கேட்டுக்கொண்டுள்ளார். 

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவை ஆதரித்ததாக தையல் கடை நடத்திவருபவரைக் கொடூரமான முறையில் கொன்றதாக இருவரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்திவரும் கண்ணையா லால் என்பவர் நூபுர் ஷர்மாவை ஆதரவாளர் எனத் தெரிகிறது. அவர் தன்னுடைய முகநூலில் நூபுர் ஷர்மாவை முகப்புப் படமாகவும் வைத்துள்ளார். மேலும் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பதிவில் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

தையல் கடை உரிமையாளர்

இந்நிலையில் அவரது கடைக்கு வந்த இருவர், அவரிடம் துணிக்கு அளவு கொடுப்பது போன்று நடித்து பிறகு கத்தியைக் கொண்டு தாக்க ஆரமித்துள்ளனர். இதனை ஒருவர் விடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் தையல் கடை உரிமையாளரை கத்தியைகைக் கொண்டு சரமாறியாக வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்களும் படுகாயம் அடைந்தனர். 

இதனால் உதய்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், 600 காவலர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முழுவதுமாக  துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கெளஸ் முகமது, ரியாஸ் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உதய்பூரில் நடந்த இந்த கொடூர சம்பவத்துக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இயற்கையும் மனித உளவியலும்...

கம்பனின் தமிழமுதம் - 61: நடக்க வேண்டியதே நடக்கும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பாரதி!

திருமணமும் மரணமும்...

SCROLL FOR NEXT