இந்தியா

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள்

DIN

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது.

கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT